முன்னாள் நிதித்துறை செயலாளர் ராஜீவ்குமார் புதிய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார்.!

முன்னாள் நிதித்துறை செயலாளரான ராஜீவ் குமார் புதிய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார்.
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு அடுத்த இடத்தில் இருந்த தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, ஆசிய வளர்ச்சி வங்கியின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து தனது தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார். அதனையடுத்து அவர் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து நேற்றைய தினத்துடன் விடுவிக்கப்பட்டார். தற்போது புதிய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பேற்றுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஜீவ் குமார் மத்திய நிதித்துறை செயலாளராகவும், ஐஏஎஸ் அதிகாரியாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அசோக் லவாசா பதவி விலகியதை அடுத்து ராஜீவ் குமாரை புதிய தேர்தல் ஆணையராக நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து இன்று முதல் ராஜீவ் குமார் பொறுப்பேற்று கொண்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025