அதிர்ச்சி ரிப்போர்ட்.! சில சானிடைசர்களில் அதிகளவு நச்சுதன்மை.! கண்பார்வை பறிபோகும் அபாயம்.!

மத்திய நுகர்வோர் வழிகாட்டுதல் அமைப்பான CGSIயானது வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்ட சில சானிடைசர்களில் அதிகளவு நச்சுத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பார்வை குறைபாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
மத்திய நுகர்வோர் வழிகாட்டுதல் அமைப்பான CGSIயானது கடந்த ஆகஸ்ட் 31 அன்று ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், அவர்கள் பரிசோதித்த 122 சானிடைசர் மாதிரிகளில் 5 நச்சுத்தன்மை கொண்ட மெத்தனால் கலந்திருந்ததாகவும், அவற்றில் 45 சானிடைசர்களில் பாட்டிலில் குறிப்பிடப்பட்ட விவரக்குறிப்புகளுடன் உள்ளே இருக்கும் வேதிப்பொருட்கள் பொருந்தவில்லை. எனக்குவம் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது. மேலும் இவைகளில் 4% நச்சுதன்மை கொண்ட மெத்தனால் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சானிடைசர்கள் மாதிரியானது, மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, நவி மும்பை, தானே, சந்தையில் கிடைத்தவை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகும். அவைகளை பாட்டிலில் பதியப்பட்டுள்ள உள்ளடக்கங்கள் அதன் உட்பொருட்களுடன் பொருந்துமா என்பதையும், பயன்படுத்துவோருக்கு தீங்கு விளைவிக்குமா என்பதையும் சரிபார்க்க அவர்கள் சோதனை செய்தனர்.
சோதனை முடிவில் அறியப்பட்ட மேற்கண்ட முடிவுகளின் படி, இது மீளமுடியாத பார்வை நரம்பு பாதிப்பு மற்றும் கண்பார்வை பறிபோகுதல் போன்ற கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025