மத்திய நுகர்வோர் வழிகாட்டுதல் அமைப்பான CGSIயானது வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்ட சில சானிடைசர்களில் அதிகளவு நச்சுத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பார்வை குறைபாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. மத்திய நுகர்வோர் வழிகாட்டுதல் அமைப்பான CGSIயானது கடந்த ஆகஸ்ட் 31 அன்று ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், அவர்கள் பரிசோதித்த 122 சானிடைசர் மாதிரிகளில் 5 நச்சுத்தன்மை கொண்ட மெத்தனால் கலந்திருந்ததாகவும், அவற்றில் 45 சானிடைசர்களில் பாட்டிலில் குறிப்பிடப்பட்ட விவரக்குறிப்புகளுடன் உள்ளே இருக்கும் வேதிப்பொருட்கள் பொருந்தவில்லை. […]