கிசான் திட்டத்தில் முறைகேடு – விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி.!

பிரதமரின் கிசான் திட்ட மோசடி தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் சிபிசிஐடி ஆய்வாளர் தீபா தலைமையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு அதிக அளவில் நடைபெற்று இருப்பதால் தற்காலிகமாக இந்த திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அந்தந்த மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு வேளாண்மை துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தெரிவித்திருந்தார். இதனால் பல மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டடு, விசாரணை நடைபெற்றது வருகிறது. மேலும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் வருகிறது.
இந்நிலையில், பிரதமரின் கிசான் திட்ட மோசடி தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் சிபிசிஐடி ஆய்வாளர் தீபா தலைமையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் 8 பேரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறனர். விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 5 பேர் உட்பட 8 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடலூரில் விவசாயிகள் அல்லாத 37 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகள் ஏற்கனவே முடக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025
பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!
May 10, 2025