நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை- மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

இன்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாளான இன்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி, தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் சட்டப் பேரவை நாளை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன் சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை வைத்தேன். அதில், நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற என கூறினேன்.
ஆனால், சபாநாயகர் கோரிக்கை ஏற்றுக்கொள்ளவில்லை அது வருத்தத்திற்குரியது, கண்டனத்திற்குரியது என தெரிவித்தார். மேலும், பேரவை நாள்களை நீடிக்க கோரிக்கை வைத்தும் ஏற்றுக்கொள்ளபடவில்லை என ஸ்டாலின் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025