தோனியின் ஆட்டத்தை பார்க்க ஆர்வம்… சேவாக் உற்சாகம்…

நாளை மறுநாள் நடக்க உள்ள ஐபிஎல் தொடக்க லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இது குறித்து முன்னால் நட்சத்திர வீரர் சேவாக் மீண்டும் எம்.எஸ்.தோனியின் ஆட்டத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்திருப்பதே இந்த ஐபிஎல் தொடரின் சிறந்த ஹைலைட்டாக இருக்கும் என்று முன்னாள் நட்சத்திர வீரர் வீரேந்திர சேவக் கூறியுள்ளார். இது குறித்து அவர், ஐபிஎல் தொடரின் 13வது சீசன் அனைவருக்குமே தோனி மீண்டும் களமிறங்குவது மிகப் பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் அவர் விளையாடுவதை பார்க்க மிகுந்த ஆர்வமாக உள்ளது. இந்த தொடரில் நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. நான் ஊரடங்கு காலத்தில் பழைய போட்டிகளின் காட்சிகளை பார்த்து ரசித்தேன். என்னுடைய ஆட்டம் உட்பட பல வீரர்களின் செயல்பாட்டை அலசி ஆராய்ந்தேன். இந்தியர்களின் மரபணுவிலேயே கிரிக்கெட் ஊறிப் போயிருக்கிறது. அந்த அற்புதமான விளையாட்டுக்காக நாம் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம். இவ்வாறு நட்சத்திர வீரர் சேவக் கூறியுள்ளார். நாளை மறுநாள் ஐபிஎல் தொடக்க லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்ற நிலையில் இவரின் கருத்து ஐபில் ரசிகர்களை மேலும் குஷியேற்றியுள்ளது.