உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு?

உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு 3 கோடியை கடந்துள்ளது.
கொரானா வைரஸ் நாளுக்கு நாள் உலக அளவில் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இந்நிலையில் இதுவரை உலகம் முழுவதிலும் 30,026,368 பேர் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 944,716 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 21,793,807 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்பொழுது மருத்துவமனைகளில் 7,287,845 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் 308,226 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று ஒரே நாளில் 6,229 பேர் உயிரிழந்துள்ளனர்.