#IPL2020:ராஜஸ்தானிடன் சறுக்கியது ஏன்??தோனி விளக்கம்

Default Image

நேற்று டி20 தொடரின் 4-வது லீக் போட்டியில் சென்னை VS ராஜஸ்தான் அணிகள்மோதியது. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 216 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய சென்னை அணி 5 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

தோல்வி குறித்து தோனி கூறியதாவது:நான் நீண்ட காலமாக பேட்டிங் செய்யவில்லை. 14 நாட்கள் தனிமைப்படுத்தலும் ஆட்டத்திற்கு உதவவில்லை. நான் மெதுவாக தொடருக்குள் நுழைந்து கொண்டு இருக்கிறேன். அதே போல் பலதரப்பட்ட விஷயங்களையும் நாம் முயற்சிக்க வேண்டி உள்ளது, அதாவது சாம் கரண் அல்லது ரவீந்திர ஜடேஜாவை முன்னால் இறக்கிப் பார்க்க வேண்டி உள்ளது.

இத்தகைய பரிசோதனை முயற்சிகளை நாங்கள் நீண்ட காலமாக செய்து பார்க்கவில்லை. தொடரின் ஆரம்பத்தில் தான் சோதனைகள் செய்ய வாய்ப்பு கிடைக்கும், தொடர் செல்லச்செல்ல மூத்த வீரர்கள் பொறுப்பு எடுத்துக் கொள்ளலாம். இல்லையெனில் ஒரே பாணியை மீண்டும் மீண்டும் கடைப்பிடிக்கும் அணியாக முடிந்து விடுவோம்.

இங்கு சில வித்தியாசமான முயற்சிகளை செய்து பார்க்க வாய்ப்பு உள்ளது, அதாவது அது பயன் அளித்தால் செய்து பார்க்கலாம். பயனளிக்கவில்லையானால் நாம் நம் பழைய பலங்களுக்கு திரும்பப் போகிறோம்.

217 ரன்கள் இலக்கு, நல்ல தொடக்கம் வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. ஸ்டீவ், சஞ்சு அபாரமாக ஆடினார்கள். ராஜஸ்தான் பவுலர்களையும் பாராட்டத்தான் வேண்டும். அதிகப் பனிப்பொழிவிலும் எந்த லெந்தில் வீசுவது என்பதை அந்த அணி வீரர்கள்அறிந்து வீசினர். ஸ்கோர் உள்ளது என்றால், எந்த லெந்தில் வீசுவது என்பதை நடந்து முடிந்த முதல் இன்னிங்ஸைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ராஜஸ்தான் ஸ்பின்னர்கள் பலதரப்பட்டதை முயற்சி செய்யாமல் இதைத்தான் செய்தனர் . மாறாக எங்கள் ஸ்பின்னர்கள் தவறிழைத்தனர் என்று தோல்வி குறித்து விளக்கமளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்