ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் – முதல்வர் பழனிசாமி ஆலோசனை.!

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அக்டோபா் 1-ஆம் தேதி முதல் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விற்பனை இயந்திரங்களையும் மாற்றம் செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த திட்டத்தைச் செயல்படுத்துவது தொடா்பாக, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையுடன் முதல்வா் பழனிசாமி ஆலோசனை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் காமராஜ், செல்லூர் ராஜூ, அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடா்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025