செப்.27 முதல் முக்கிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு.!

சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவிற்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு அரசு தடை விதித்தது. அதன் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போதும், போக்குவரத்து சேவைகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் சிக்கிக் கொண்டிருந்த புலம் பெயர் தொழிலாளர்களுக்காக ஒரு சில சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்தது. அந்த ரயில்கள் மூலமாக, கொரோனா பரவும் வாய்ப்பு அதிகமாக இருந்ததையடுத்து அதற்கும் அரசு தடை விதித்தது.
இதையடுத்து, கடந்த 7ம் தேதி முதல் பயணிகள் ரயில்களையும் கடந்த 1ம் தேதி முதல் பேருந்து சேவைகளையும் இயக்க அனுமதி அளித்தது.
அதனால், சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவிற்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செப்.27 முதல் சென்னை – திருவனந்தபுரம், சென்னை – மங்களூரு, சென்னை – மைசூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் விரைவு ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025