புதுச்சரி விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் வெட்டி கொலை – உயிரை பிரித்த பதவி!

புதுச்சரி விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள விஜய்சேதுபதி ரசிகர் மன்றத்தின் தலைவர் மணிகண்டன் என்பவர் நேற்று இரவு 11 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நெல்லித்தோப்பு மார்க்கெட் எதிரே வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் வழிமறித்து வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உருளையன்பேட்டை போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவரை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர். விஜய்சேதுபதியின் ரசிகர் மன்ற தலைவர் மணிகண்டன் மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஏற்கனவே கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் அல்லது இவர் செய்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்க இது நடந்ததா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் கூறும்போது விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் மணிகண்டன் உறவினர் ராஜசேகர். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பதவி போட்டியால் ராஜசேகர் ரசிகர் மன்றத்தில் இருந்து விலகி உள்ளார்.
இந்நிலையில் இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் சமாதான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று உள்ளது .அதனை அடுத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின் அங்கிருந்து கடந்து சென்ற மணிகண்டனை சிலர் பின்தொடர்ந்து சென்று கொலை செய்து உள்ளதாக தெரியவந்துள்ளது என போலீசார் கூறினர். சந்தேகத்தின் அடிப்படையில் தற்போது சிலரைப் பிடித்து விசாரித்து வருவதாகவும், உண்மையான குற்றவாளிகள் யார் என்பது குறித்து விரைவில் கண்டுபிடித்து விடுவோம் எனவும் கூறியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
4-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி நிதான தொடக்கம்.., 2 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவிப்பு.!
July 25, 2025
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வில்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இன்று பதவியேற்பு.!
July 25, 2025
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி….நாளை இந்த மாவட்டங்களில் மழைக்கு வைப்பு!
July 24, 2025
‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!
July 24, 2025