திருநங்கை காவலருக்கு பாலியல் தொல்லை – விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

திருநங்கை காவலருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதால், அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தேனி மாவட்டத்தில் வாசிக்க கூடிய சம்யுக்தா எனும் திருநங்கை காவலருக்கு படித்து முடித்துவிட்டு முன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக திருவெறும்பூர் அருகே நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் உள்ள பெண் காவலர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த பயிற்சியின் போது கல்லூரி முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் திருநங்கை காவலருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனால் வேதனை அடைந்த திருநங்கை காவலர் டிஐஜியிடம் செல்போன் மூலம் புகார் அளித்துள்ளார். புகார் அளித்ததைத் தொடர்ந்து கல்லூரி சப்-இன்ஸ்பெக்டர் திருநங்கையிடம் தகராறு செய்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான திருநங்கை நேற்று காலை விஷம் குடித்துள்ளார். இந்நிலையில் இதற்கு காரணமான கல்லூரி முதல்வர் முத்துக்கருப்பன் மற்றும் துணை முதல்வர் மனோகரன் ஆகியோர் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்து திருநங்கை கூறுகையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட இவர்களின் பாலியல் தொந்தரவு தான் காரணம் எனவும், வேறு எந்த ஒரு தனிப்பட்ட காரணமும் இல்லை எனவும் கூறியுள்ளார். தற்போது திருநங்கை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி மறைவு : நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!
July 14, 2025
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025