ஐந்தாம் கட்ட தளர்வு: புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் இன்று முதல் இயக்கம்.!

ஐந்தாம் கட்ட தளர்வாக புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் அதிக அளவில் பரவி வந்ததால் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதிலும் பள்ளிகள் கல்லூரிகள் போக்குவரத்து துறை, தொழில்துறை என அனைத்துமே முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் தற்போது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசு ஒவ்வொரு கட்டமாக தளர்வுகளை அறிவித்து வருகிறது.
அதன்படி, தற்போது புதுச்சேரியில் ஐந்தாம் கட்ட தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக ஏழு மாதத்திற்கு பின்னர் தற்போது தனியார் பேருந்து சேவைகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் புதுச்சேரி முழுவதும் தனியார் பேருந்துகள் அனைத்தும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025