சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு அறிவிப்பு.!

சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள் சான்றிதழ் பெற ஆவணங்கள் சமர்பிக்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களை பெற இனி ஆவணங்களை சமர்பிக்க வேண்டாம் ஆவணத்திற்கு பதிலாக முக அடையாள அட்டை முறையை சி.பி.எஸ்.இ அறிமுக செய்துள்ளது.
இதன் அடிப்படையில், டிஜிட்டல் ஆவணங்களை கையாளும் பர்னியாம் மஞ்சுஷா,டிஜிலாக்கர் போன்ற செயலிகளில் மாணவர்களின் முகம் சி.பி.எஸ்.இ ஹால் டிக்கெட்டில் இருக்கும் படத்தோடு ஒப்பீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இவை இரண்டும் ஒரே மாதிரி இருந்தால் மட்டுமே சான்றிதழ்கள் மாணவர்களின் இமெயிலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!
July 30, 2025
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 30, 2025