துருக்கி நிலநடுக்கம்: இடிபாட்டில் சிக்கிய முதலாளியை காப்பாற்ற உதவிக்கு அழைத்த வளர்ப்பு நாய்!

துருக்கி நிலநடுக்கத்தில் ஏற்பட்ட இடிபாட்டில் சிக்கிய தனது முதலாளியை காப்பாற்ற உதவிக்கு பிறரை அழைத்த வளர்ப்பு நாயின் பாசம் பலரையும் கண்கலங்க செய்துள்ளது.
துருக்கியில் உள்ள ஏகன் எனும் தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கமும், லேசான சுனாமியும் ஏற்பட்டுள்ளது. 7.0 ரிக்டர் அளவில் பதிவாகிய இந்த நிலநடுக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் பல சரிந்ததால், அங்கு வாசித்த பலர் அந்த இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். தற்பொழுது அங்கு மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்றுக்கொண்டுள்ளது.
இதுவரை 22 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 120 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த விபத்தில் கட்டிடங்களுக்குள் தனது முதலாளி சிக்கிக்கொண்டதை அவர்களின் வளர்ப்பு நாய் ஒன்று கண்டறிந்து அவரை காப்பாற்ற உதவிக்கு மற்றவர்களை கண்ணீருடன் அழைத்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரது மனதையும் உருகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!
May 23, 2025
அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!
May 23, 2025