ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டம்.. தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.!

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் கோவையை சேர்ந்த இளைஞன் தற்கொலை செய்து உயிரை மாய்துகொண்டுள்ளார்.
அண்மை காலங்களாகவே ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம் தங்கள் பணத்தை இழந்து அதனால் கடன் பிரச்சனை அல்லது மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
அண்மையில், கூட விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளம் வயதுடைய ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், தற்பொழுது கோவையில் இது போன்ற ஒரு துயரசம்பவம் நேர்ந்துள்ளது. கோவையில் சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய மதன்குமார் எனும் இளைஞன் ஆன்லைன் ரம்மியில் தனது நேரத்தையும் பணத்தையும் அதிகமாக செலவு செய்துள்ளார்.
இந்த விளையாட்டின் சுவாரஸ்யம் கூடவே கடன் வாங்கி ரம்மி விளையாடி அந்த பணத்தையும் இழந்துள்ளார். அதன் பின் என்ன செய்வதென்று தெரியாமல் மன உளைச்சலில் தவித்த மதன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இது தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், பலரின் உயிர்களை பறிக்க கூடிய இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யுமாறும் போலீசாரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025