”கீழடி ஆய்வறிக்கையை திருத்த மாட்டேன், அது குற்றம்” – அமர்நாத் ராமகிருஷ்ணன்.!

தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன், கீழடி அகழாய்வு முடிவுகளை மாற்ற முடியாது என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

Amarnath ramakrishnan

சென்னை : கீழடி அகழாய்வு அறிக்கையில் சிலவற்றிற்கு மத்திய தொல்லியல் துறை விளக்கம் கோரி இருந்தது. இதற்கு அரசியல் கட்சிகள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு முறையல்ல, அடுத்தடுத்த கீழடி அகழாய்வு அறிக்கையைத் திருத்தும்படி மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில், அப்போதைய அகழாய்வு இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.

அதில், “கிமு 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த கீழடி நாகரிகத்தை கிமு 3ம் நூற்றாண்டு என மாற்றச் சொல்வது குற்றம் மற்றும் அநீதியானது. எனது கண்டுபிடிப்பைத் திருத்தினால் நான் குற்றவாளியாகிவிடுவேன். 982 பக்க ஆய்வறிக்கையில் எழுத்துப் பிழையை வேண்டுமானால் திருத்துகிறேன், ஆனால் உண்மையைத் திருத்தமாட்டேன் என அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு திருத்தப்பட்டால் அது குற்றம் என்றும் அவர் கூறியுள்ளார். கீழடி நாகரிகத்தை கி.மு. 8-ம் நூற்றாண்டிலிருந்து கி.மு. 3-ம் நூற்றாண்டாக மாற்றச் சொல்வது அநீதியானது என்றும், ஆய்வறிக்கை அறிவியல் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகவும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், கீழடி பற்றி அறியாத ஒருவர் எப்படி அங்கு ஒன்றுமில்லை என கூறமுடியும்? அறிக்கையை முதலில் ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் ஷெகாவத் படித்துப் பார்க்கட்டும் என்று தொல்லியல்துறை
இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்