எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!

ஏர் இந்தியா விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கை குறித்து இந்திய விமானிகள் சங்கம் விமர்சனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

air india ahmedabad crash

டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில் 241 பேர் இருந்தனர். ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். இந்த விமான விபத்து தொடர்பாக AAIB இன் முதற்கட்ட அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி, அமெரிக்க செய்தித்தாள் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’, ‘அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் எரிபொருள் சப்ளையை விமான கேப்டன் துண்டித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த தகவலின்படி, காக்பிட் குரல் பதிவில், கேப்டன் சுமித் சபர்வால், இணை விமானி கிளைவ் குண்டரிடம், “நீங்கள் ஏன் எரிபொருள் சுவிட்சை ஆஃப் செய்தீர்கள்?” என்று கேட்க, இணை விமானி, “நான் செய்யவில்லை” கூறிவிட்டு கேப்டன் அமைதியாக இருந்ததாகவும் அமெரிக்க பகுப்பாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்திய அரசாங்கம் இந்தக் கூற்றை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பைலட் மீதான குற்றச்சாட்டுகளுக்கு இந்திய விமானிகள் சங்கம் (FIP) கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, இந்திய விமானிகள் சங்கம், ”விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை, தொடர்ந்து ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. தகுதியுடையவர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள், விமானிகள் யாரும் விசாரணைக் குழுவில் இல்லை. விபத்துக்கு விமானிகள் காரணம் என்ற தொனியில் விசாரணை அறிக்கை உள்ளது. நேர்மையான, உண்மையின் அடிப்படையிலான விசாரணையை வலியுறுத்துகிறோம்’ என்று கூறியது.

இதற்கிடையில், AAIB அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு கடந்த வாரம் இந்த அறிக்கை ஆரம்பகட்ட கண்டுபிடிப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்றும், இறுதி அறிக்கை வெளியிடப்படும் வரை “யாரும் எந்த முடிவுக்கும் விரைந்து செல்லக்கூடாது” என்றும் கூறியிருந்தார்.

கேப்டன் சுமீத் சபர்வால் 15,000 மணிநேரங்களுக்கு மேல் பறந்த அனுபவம் கொண்டவர். துணை விமானி கிளைவ் குந்தர். அவர் 3,400 மணிநேரங்களுக்கு மேல் பறந்த அனுபவம் கொண்டவர். இது வெறும் ஆரம்ப அறிக்கைதான் என்று இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்