3 நாட்களில் 7 கண்டங்களுக்கு பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்த பெண்மணி!

3 நாட்களில் 7 கண்டங்களுக்கு பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்த பெண்மணி.
ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த டாக்டர் கவ்லா அல் ரோமைதி. இவர் ஏழு கண்டங்களுக்கு, 3 நாட்கள், 14 மணி நேரம், 46 நிமிடம் 48 வினாடிகளில் வேகமாக பயணித்துள்ளார். இவரது இந்த சாதனை பயணம் கின்னஸ் சாதனை படைக்க உதவி புரிந்துள்ளது. இந்த சிறப்பு வாய்ந்த பயணத்தின்போது அவர் அமைதி 208 நாடுகளையும், அதன் சார்பு பகுதிகளையும் பார்வையிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுமார் 200 வெவ்வேறு தேசிய இனங்களை கொண்டுள்ளது. நான் அவர்கள் நாடுகளுக்கு சென்று, அவர்களின் கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளைப் பற்றி அறிய விரும்பினேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், இது ஒரு கடினமான பயணம். குறிப்பாக விமான நிலையங்களில் அதிகமான பொறுமையுடன் இருக்கவேண்டும் என்றும், பல தரப்பட்ட விமான பயணங்களையும் சமாளிக்க வேண்டியிருந்தது என்றும், கின்னஸ் உலக சாதனை பட்டதை பெற்றது, எனக்கும், எனது சமூகத்திற்கும் கிடைத்த முழுமையான மரியாதை என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025