நற்செய்தி.. தமிழக போலீசாருக்கு ஒரு நாள் விடுப்பு!

தமிழக போலீசாருக்கு ஒரு நாள் விடுப்பு வழங்க தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் காவலர்கள் பணியாற்றும் நேரம், விடுப்பு முறை உள்ளிட்டவை குறித்து பல ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
காவலர் பணி விதிகளின்படி, வாரத்தில் 6 நாள் வேலை பார்த்தால் ஒரு நாள் விடுப்பு வழங்க தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, கொரோனா பரவும் காலகட்டத்தில் கொரோனா நோய் காரணமாகவும், உடல்நிலை சரியில்லாமலும், மன உளைச்சல் காரணமாக காவலர்கள் அதிகம் உயிரிழப்பதை தடுக்க இந்த வாரம் வார விடுப்பை கட்டாயமாக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வாரத்தில் ஏதாவது ஒரு நாள் விடுப்பும், ஞாயிற்றுக்கிழமை விடுப்பை சுழற்சி முறையில் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.