வித்தியாசமான கெட்டப்பில் விஜய் சேதுபதி.! லாபம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.!

நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் லாபம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வித்தியாசமான கெட்டப்பில் உள்ள விஜய் சேதுபதியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் .அதில் ஒன்று லாபம் . ஜனநாதன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தினை விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது . இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள விஜய் சேதுபதியின் லாபம் பட கெட்டப் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.லுங்கி ,சட்டை , செம்பட்டை முடி ,அருகில் ரத்தக் கறையுடனான கத்தி என வித்தியாசமான கெட்டப்பில் விஜய் சேதுபதி உள்ளார் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான லாபம் படத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
The shooting of #MakkalSelvan @VijaySethuOffl‘s SocioPolitical #Laabam is in full swing & nearing completion.#SPJhananathan @immancomposer @ramji_ragebe1 @7CsPvtPte @KalaiActor @thilak_ramesh @Aaru_Dir @yogeshdir @proyuvraaj pic.twitter.com/oDaMlscb3f
— VSP_Productions (@vsp_productions) November 25, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025