வலிமை படத்தின் ஷூட்டிங், ரிலீஸ் குறித்து வெளியான தகவல்.!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் படப்பிடிப்பை அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்குள் முடித்து விட்டு கோடை விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குனர்.நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளது .மேலும் அஜித் அவர்கள் ஈஸ்வர மூர்த்தி என்ற பெயரில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . மேலும் இந்த படத்தில் ஹூமா குரேஷூ ,யோகி பாபு,பேர்லி மன்னி ,கார்த்திகேயா உள்ளிட பலர் நடிக்கின்றனர் . யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் மற்றும் ரேஸ் காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது .
சென்னையின் புறநகர் பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பானது தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.அதில் அஜித் அவர்களுக்கு விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.இதுவரை வலிமை படத்தின் அப்டேட் எதுவும் வெளி வராததால் ரசிகர்கள் சற்று கவலையில் உள்ளனர் . இந்தாண்டு வெளியாகவிருந்த வலிமை படத்தினை அடுத்தாண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அது மட்டுமின்றி படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்குள் முடிக்கவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025