ரயில் பயணிகளுக்கு நற்செய்தி.. இனி வாட்ஸ் அப் மூலம் PNR ஸ்டேட்டஸை தெரிந்துகொள்ளலாம்!

ரயில் பயணிகள், தங்களின் PNR ஸ்டேட்டஸை இனி தங்களின் வாட்ஸ் அப்-ல் காணலாம். இந்த வசதியை ரெயிலோஃபி (Railofy) நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மக்கள், தங்களின் தொலைதூர பயணத்திற்காக ரயில்வேஸை நம்பி வருகின்றனர். குறிப்பாக, டிக்கெட் புக் செய்தோர் தங்களின் PNR ஸ்டேட்டஸை தெரிந்துகொள்ள பல வழிகள் இருக்கின்றது. இந்த PNR ஸ்டேட்டஸ் மூலம் நமது ரயில் பயணத் தகவல்களை தெரிந்துகொள்ளலாம். இருக்கைகள் கன்பார்மாகிவிட்டதா? இல்லை RAC-ஆ என்பது குறித்து அறிந்துகொள்ளலாம்.
இந்தநிலையில், ரெயிலோஃபி (Railofy) நிறுவனம், தங்களின் PNR ஸ்டேட்டஸை வாட்ஸ் அப் எண்ணிற்கே நேரடியாக அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் நமது பி.என்.ஆர் ஸ்டேட்டஸ் நிலை மற்றும் ரயில் தாமத தகவல்கள், லைவ் ஸ்டேஷன் நோட்டிபிகேஷன் போன்ற பிற ரயில் தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம் என கூறப்படுகிறது. அதன்படி பயணிகள், தங்களின் PNR எண்ணை +919881193322 என்ற வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பினால் போதும். உங்கள் பயணசீட்டின் PNR எண் நிலையை நொடியில் வந்துவிடும்.
மேலும் இதில் பயணிகள் ரயில் நிலையத்தை அடையும்போது நமது நிலையம் வந்துவிட்டது எனவும், அடுத்த வரவிருக்கும் நிலையம் குறித்த தகவலையும் தெரிவிக்கும் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025