நிழல் படத்தின் படப்பிடிப்பை முடித்த நயன்தாரா .! அடுத்து யாருடன் .?

மலையாளத்தில் குஞ்சாக்கோ போபனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வந்த நிழல் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து இவர் அண்ணாத்த, நெற்றிக்கண்,காத்து வாக்குல ரெண்டு காதல் , மலையாளத்தில் நிழல் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியுள்ளார்.
மலையாளத்தில் வருடத்திற்கு ஒரு படமாவது நடிக்கும் நயன்தாரா ,இந்த வருடம் குஞ்சாக்கோ போபனுடன் இணைந்து நிழல் எனும் படத்தில் நடித்து வந்தார் .இந்த படத்தை ஒளிப்பதிவாளரான அப்பு என் பட்டாத்திரி இயக்குகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பானது அக்டோபர் 19-ம் தேதி தொடங்கி ,45 நாட்கள் படப்பிடிப்பிற்கு பின்னர் நேற்று முன்தினம் முடிவடைந்துள்ளது .இவர் அடுத்ததாக விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
லேட்டஸ்ட் செய்திகள்
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025