ஆந்திர மக்களை தாக்கிய மர்ம நோய்! ஆந்திர முதல்வர் நேரில் ஆய்வு!

Default Image

ஆந்திராவில் 250க்கும் மேற்பட்டவர்களை மர்ம நோய் தாக்கிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆந்திர முதல்வர். 

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள, எலுரு என்ற நகரில் வசிக்கும் 250-க்கும் மேற்பட்டோர் ஒரு மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், வலிப்பு மற்றும் கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, இவர்கள் அனைவரும் எலுரு பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் சிறப்பு சிகிச்சைக்காக விஜயவாடாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், அசுத்தமான தண்ணீரை உட்கொள்வதால் மக்கள் நோய் வாய்ப்பட்டு இருக்க வாய்ப்புள்ளதாக கூறிய நிலையில், தற்போது வரை இந்த நோய்கான உண்மையான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

 மேலும், மருத்துவரகளிடம் இந்த மர்ம நோயின் பின்னணி குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து, மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்றை எலுரு மருத்துவமனைக்கு விரையவும் உத்தரவிட்டார். மேலும், உள்ளூர்வாசிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், சிகிச்சைகளையும் வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay
TamilagaVettriKazhagam
TVK - meeting