திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்ட விவசாயிகள் ! போக்குவரத்து பாதிப்பு

விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில்,டெல்லியையும் , உத்திர பிரதேசத்தையும் இணைக்கக்கூடிய சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ,இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாய அமைப்புகள் அறிவித்த நிலையில் உண்ணா விரதம் இருந்து வருகின்றனர் .
இதனால் டெல்லியில் டெல்லியையும் ,உத்திர பிரதேசத்தையும் இணைக்கக்கூடிய காசியாபாத் நுழைவு வாயிலில் இன்று காலை முதலே ஏரளமான விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.இந்த போராட்டத்தை பொறுத்தவரை யாரும் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. விருப்பப்பட்டவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில்,டெல்லியையும் , உத்திர பிரதேசத்தையும் இணைக்கக்கூடிய சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர்.மேலும் அரசுக்கு எதிரான கோஷங்களையும் விவசாயிகள் எழுப்பினார்கள்.இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதனால் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025