சித்ரா தற்கொலை விவகாரம் : என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை? ஹேம்நாத் தந்தை குற்றசாட்டு!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை விவகாரத்தில், போலீசார் எனது மகனை அவசர அவசரமாக கைது செய்துள்ளனர். என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை என ஹேம்நாத் தந்தை தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பதாக சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து, இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக, அவரது கணவர் ஹேம்நாத்தை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் தற்போது பொன்னேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களாக சித்ராவின் தற்கொலை தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஹேம்நாத்தின் தந்தையிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், சித்ரா தற்கொலை வழக்கில் யாரையோ காப்பாற்ற முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், சித்ரா சம்பாதிக்கும் பணத்தை நாங்கள் ஒரு போதும் கேட்டது இல்லை. வரதட்சணையும் கேட்கவில்லை. உங்கள் பொண்ணுக்கு என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதனை செய்தால், போதும் என்று தான் கூறி இருந்தோம். போலீசார் எனது மகனை அவசர அவசரமாக கைது செய்துள்ளனர். என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025