தேர்தல் அதிகாரிகள் சொந்த மாவட்டங்களில் பணியாற்றக்கூடாது- தேர்தல் ஆணையம்..!

அடுத்தாண்டு 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைப்பெறவுள்ளது. இதனால், தேர்தல் அதிகாரிகளை நியமிக்க, இடமாற்றம் செய்ய தமிழகம் உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தமிழக அரசுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் அவர்களது சொந்த மாவட்டங்களில் பணியாற்றக்கூடாது. முந்தைய தேர்தல்களில் ஒழுங்கீன செயல்களில் சிக்கிய அதிகாரிகளை தேர்தல் பணிகளில் நியமிக்க வேண்டாம்.
தமிழகத்தில் ஆறு மாதங்களில் ஓய்வு பெற உள்ள எந்த ஒரு அதிகாரிக்கும் தேர்தல் பணி வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்ட மற்ற தேர்தல் ஆண்டு நடைபெறவுள்ளது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேலும், அரசியல் கட்சிகளும் தங்களது பிரசாரங்களை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025