சரும அழகை மேம்படுத்தும் அன்னாசி பழம்!

அன்னாசிப்பழம் எவ்வாறெல்லாம் சரும அழகை மேம்படுத்த உதவுகிறது. இந்த பழத்தை பயன்படுத்துவதன் மூலம், சரும ஆரோக்கியம் எவ்வாறெல்லாம் மேம்படுகிறது.
இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் தங்களது சரும அழகை மேம்படுத்த பல்வேறு வழிகளில் முயன்று வருகின்றன. ஆனால் இயற்கையான வழிகளை காட்டிலும், செயற்கையான முறையில் தான் இவர்களது முயற்சி காணப்படுகிறது. அவ்வாறு நாம் செயற்கையான முறையில் மேற்கொள்ளும் முயற்சிகள் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே இயற்கையான முறையை கையாள்வது சிறந்தது. தற்போது இந்த பதிவில் அன்னாசிப்பழம் எவ்வாறெல்லாம் சரும அழகை மேம்படுத்துகிறது என்பது பற்றி பார்ப்போம்.
அன்னாசி பழத்தின் சாறு தர்பூசணி மற்றும் பப்பாளி பழ சாறுடன் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறிது ஜாதிக்காய் உடன் அன்னாசிப்பழ சாறு கலந்து முகத்தில் நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முகம் பொலிவுடன் காணப்படும். மேலும், சோற்று கற்றாழை ஜெல்லுடன் அன்னாசி பழ சாறை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்பு இந்த விழுதை சோப்பு தேய்ப்பது போல முகத்தில் தேய்த்து கழுவ வேண்டும்.
இவ்வாறு முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் பருக்கள் இவ்வாறு செய்யும்போது மறைந்துவிடும். இவை மீண்டும் நமது சருமத்தை அணுகாதவாறு தடுக்கிறது சிலருக்கு வயதாவதால் முகத்தில் சுருக்கம் விழ தொடங்கும். இதற்கு தேங்காய் பாலுடன் அன்னாசி பழச்சாற்றை கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் முகத்தில் பூசி கழுவினால் இளமையாக காட்சியளிக்கும்.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025