சரக்கு ரயில் போக்குவரத்து – தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

PM Narendra Modi to inaugurate the New Bhaupur- New Khurja section and the Operation Control Centre of Eastern

நியூ பாபூர் – நியூ குர்ஜா வழித்தடத்தில் கிழக்கத்திய சரக்கு ரயில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியின் போது, உத்தரப்பிரதேசம் கிழக்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தையும்  பிரதமர் தொடங்கி வைக்கிறார்.உத்தரப்பிரதேச ஆளுநர்  ஆனந்திபென் படேல், உத்தரப்பிரதேச முதல்வர்  யோகி ஆதித்யநாத் மற்றும் ரயில்வே  அமைச்சர்  பியூஷ் கோயல் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

351 கி.மீ நீளமுள்ள நியூ பாபூர் – நியூ குர்ஜா  ரயில் போக்குவரத்து வழித்தடம் உத்தரப்பிரதேசத்தில் ரூ.5,750 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த வழித்தடம், கான்பூர்- தில்லி இடையில் உள்ள முக்கிய வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்.குறிப்பாக இந்திய ரயில்வே விரைவு ரயில்களை இயக்க வழிவகுக்கும்.

பிரயாக்ராஜில் அமைக்கப்படும் நவீன சரக்குப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் (ஓசிசி), கிழக்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்தின் கட்டுப்பாட்டு மையமாகச் செயல்படும்.  இந்த ஓசிசி, உலகளவில் மிகப்பெரிய அமைப்புகளில் ஒன்று. மிக நவீன வடிவில் இது சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் ‘கிரிகா 4’ தரத்தில் ‘சுகம்யா பாரத் திட்டத்தின்’ விதிமுறைகளின் படி உருவாக்கப்பட்டுள்ளது.