இன்னும் ஒரு நாள் மட்டும் காத்திருங்க! மாஸ்டர் பட இயக்குனர் ட்வீட்!

மாஸ்டர் படத்தை உங்களிடம் கொண்டுவர ஒன்றரை வருடமாக போராடி இருக்கிறோம். மாஸ்டர் படத்தில் லீக்கான காட்சிகள் உங்களது கண்ணில் பட்டால் ஷேர் செய்ய வேண்டாம்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் படம் வெளியாகவுள்ள நிலையில், நேற்று இப்படம் இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘மாஸ்டர் படத்தை உங்களிடம் கொண்டுவர ஒன்றரை வருடமாக போராடி இருக்கிறோம். மாஸ்டர் படத்தில் லீக்கான காட்சிகள் உங்களது கண்ணில் பட்டால் ஷேர் செய்ய வேண்டாம். இன்னும் ஒரு நாள் மட்டும் காத்திருங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025