விண்டோஸ், மேக்-ல் “சிக்னல்” பயன்பாட்டை உபயோகிப்பது எப்படி?

Default Image

வாட்ஸ் அப்-ஐ போல சிக்னல் பயன்பாட்டை வெப்பில் உபயோகிக்க முடியாது. அதற்க்கு காரணம், சிக்னல் செயலிக்கு வெப் வெர்சன் இல்லாதது. ஆனாலும் அதனை எப்படி வெப்பில் உபயோகிப்பது குறித்து காணலாம்.

வாட்ஸ்அப்-ன் புதிய Terms and Privacy Policy Update-க்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதற்கு மாறாக சிக்னல், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அந்தவகையில், “use signal” என எலான் மஸ்க் ட்வீட் செய்த பிறகு சிக்னல் செயலியை ஏராளமானோர் பயன்படுத்த தொடங்கினார்கள். அதில் கிட்டத்தட்ட வாட்ஸ் ஆப்பில் உள்ளதைப்போல அனைத்து அம்சங்களும் உள்ளது.

ஆனால் வாட்ஸ் அப்-ஐ போல சிக்னல் பயன்பாட்டை வெப்பில் உபயோகிக்க முடியாது. அதற்க்கு காரணம், சிக்னல் செயலிக்கு வெப் வெர்சன் இல்லாதது. ஆனாலும் அதனை எப்படி வெப்பில் உபயோகிப்பது குறித்து காணலாம்.

விண்டோஸ் டெஸ்க்ட்டாப்:

  • முதலில் குரோம் அல்லது இதர பிரவுசரை ஓபன் செய்து, https://signal.org/download/ இந்த தளத்திற்குள் செல்லவும்.
  • பின், சிக்னலின் டெஸ்க்டாப் வெர்ஷனை டவுன்லோட் செய்ய “Download for Windows” என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • இன்ஸ்டால் ஆனப்பிறகு உங்களின் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் அதனை ஓபன் செய்யவும்.
  • உங்களின் சிக்னல் அக்கவுண்ட்டை டெஸ்க்டாப் வெர்ஷனில் இணைக்க, உங்கள் மொபைலில் உள்ள சிக்னல் செயலியை ஓபன் செய்யவும்.
  • செட்டிங்ஸ்க்குள் சென்று, Linked device ஆப்ஷனை கிளிக் செய்து, சிக்னல் டெஸ்க்டாப் வெர்சனில் காட்டப்படும் QR கோடை ஸ்கேன் செய்யவும். (whatsapp web-ல் செய்வதை போல)
  • இவ்வாறு செய்தால், நீங்கள் சிக்னல் செயலியை விண்டோஸ் டெஸ்க்ட்டாப்பில் உபயோகிக்கலாம்.

ஐ-பாட் மற்றும் மேக் (iPad and mac):

  • உங்களின் ஐ-பாட் மற்றும் மேக்-ல் சிக்னல் செயலியை உபயோகிக்க வேண்டுமானால், https://signal.org/download/macos/ இந்த லிங்கிற்குள் சென்று, Download for Mac என்பதை கிளிக் செய்யவும்.
  • இன்ஸ்டால் ஆனப்பிறகு உங்களின் ஐ-பாட் அல்லது மேக்-ல் ஓபன் செய்யவும்.
  • உங்களின் சிக்னல் அக்கவுண்ட்டை ஐ-பாட் அல்லது மேக்-ல் இணைக்க, உங்கள் மொபைலில் உள்ள சிக்னல் செயலியை ஓபன் செய்யவும்.
  • செட்டிங்ஸ்க்குள் சென்று, Linked device ஆப்ஷனை கிளிக் செய்து, உங்களின் ஐ-பாட் அல்லது மேக்-ல் காட்டும் QR கோடை ஸ்கேன் செய்யவும்.
  • இவ்வாறு செய்தால் போதும். நீங்கள் உங்களின் ஐ-பாட் அல்லது மேக்-ல் சிக்னல் செயலியை உபயோகிக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies