பனையூர் அலுவலகத்திற்கு திடீர் விசிட் ! குவிந்த தளபதி ரசிகர்கள்…!

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்துள்ளார்.
விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் 25 வது நாளாக வெற்றி நடைபோற்று வருகிறது. இந்த படத்திற்கான ஒரிஜினல் சவுண்ட் ட்ரக்கை படக்குழுவினர் இன்று மாலை 6 மணிக்கு வெளியியீடவுள்ளனர்.
இந்த நிலையில், சென்னையை அடுத்த பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடிகர் விஜய் செல்லும் பொழுது அங்கு ஏராளமான தளபதி ரசிகர்கள் குவிந்தனர் அதற்கு பிறகு ரசிகர்கள் சந்தித்தபோது அவர்களுடன் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்து கொண்டார். மாவட்ட வாரியாக தொடர்ந்து ரசிகர்களை சந்தித்து வருகிறார். மேலும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், மற்றும் ரசிகர்களுடன் எடுக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் கடந்த ஆண்டு நெய்வேலியில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் பொது அவர் எடுத்த புகைப்படங்களை தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதைபோல் இன்று எடுக்கும் புகைப்படங்களை பதிவிடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Vijay at his office Panaiyur
விழுப்புரம், தேனி மாவட்ட ரசிகர்களை இன்று சந்தித்தார் விஜய். #Thalapathy pic.twitter.com/NiRFtcR5AJ
— Senthilraja R (@SenthilraajaR) February 6, 2021
தலைவா ????????????#MasterOST #Thalapathy #ThalapathyVijay #Master pic.twitter.com/H1eceejfMJ
— ⚔️நிஷாந்த்_????????????⚔️ ᴹᵃˢᵗᵉʳ (@Itz_Nishii) February 6, 2021