முழுக்க முழுக்க கானா நிறைந்த பாரிஸ் ஜெயராஜ் Jukebox…!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள “பாரிஸ் ஜெயராஜ்” படத்தின் முழுக்க முழுக்க கானா இசை நிறைந்த {Audio Jukebox} தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஜான்சன் கே இயக்கத்தில் உருவாகியுள்ள பாரிஸ் ஜெயராஜ் என்ற படத்தில் நடிகர் சந்தானம் நடித்து முடித்துள்ளார் .இவர் சந்தானம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற “A1” படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“பாரிஸ் ஜெயராஜ்” படத்தில் கதாநாயகியாக அனைகா சோடி மற்றும் சாஷ்டி ராஜேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த பாரிஸ் ஜெயராஜ் படத்தின் முழுக்க கானா இசை நிறைந்த {Audio Jukebox} தற்போது வெளியாகியுள்ளது. இத்தனை ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025