கலைஞர் நிற்பதாக எண்ணி அனைவரும் பாடுபட வேண்டும் – கனிமொழி எம்பி

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் கலைஞர் நிற்பதாக எண்ணி அனைவரும் பாடுபட வேண்டும் என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பேசிய திமுக எம்பி கனிமொழி, ஜனநாயக வழியில் வந்திருக்க கூடிய ஒரு இயக்கம் திமுக. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் கலைஞர் நிற்பதாக எண்ணி அனைவரும் பாடுபட வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் மத்திய அரசின் பின்னணியில் உள்ள அதிமுகவை எதிர்த்து தேர்தலை சந்திக்க போகிறோம் என்று தெரிவித்துள்ளார்.