‘தி க்ரே மேன்’ ஹாலிவுட் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் இதுவா.?சும்மா வெறித்தனமா இருக்கும் போலயே.?

தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கும் தனுஷின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.அதை தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேனுடன் “D43” படத்தில் நடித்து வந்தார் .இதன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த தனுஷ் தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்றார்.
மார்க் க்ரேனியின் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட உள்ள ‘தி க்ரே மேன்’ படத்தினை அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ இயக்கவுள்ளனர். ஓடிடி தளமான நெட் ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ள இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து பிரபல ஹாலிவுட் ஹீரோக்களான ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். ஆக்ஷன் திரில்லராக உருவாகவுள்ள இந்த படத்தினை குறித்து மார்க் க்ரேனி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த படத்தில் ரயான் கோஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற சிஐஏ அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் ,அவரை பணத்திற்காக கொலை செய்யவிருக்கும் கூட்டத்தின் தலைவனாக தனுஷ் நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.மேலும் பேசிய மார்க் க்ரேனி, தனுஷூடன் நான் பழகவில்லை என்றாலும் , அவர் என்னை கவர்ந்த நடிகர்களில் ஒருவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025