“எனக்கு விசில் போட தெரியாது.. ஆனா உங்கள விசில் போட வைப்பேன்!”- தமிழில் பேசிய உத்தப்பா!

“எனக்கு விசில் போட தெரியாது.. ஆனா உங்க கையாள உங்கள விசில் போட வைப்பேன்” என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த ராபின் உத்தப்பா பேசியுள்ளார்.
இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடர் நெருங்கவுள்ள நிலையில், அதற்கான ஏலம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த 18 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் 57 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் முக்கிய வீரர்களான ஆரோன் பின்ச், அலெக்ஸ் கேரி உள்ளிட்ட வீரர்களை சங்க எந்த அணியும் முன்வரவில்லை.
2019-ல் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூ.3 கோடிக்கு ராபின் உத்தப்பாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. அவர் கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகள் விளையாடி 196 ரன்கள் எடுத்தார். தற்பொழுது ராஜஸ்தான் அணியில் இருந்த உத்தப்பாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 3 கோடி ருபாய் கொடுத்து வாங்கியுள்ளது.
சென்னை அணியில் தொடக்க வீரராக இருந்த ஷேன் வாட்சன் ஓய்வு பெற்றுள்ளார். மேலும், முரளி விஜய் நீக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, சென்னை அணி ராபின் உத்தப்பாவை தேர்வு செய்துள்ளது. தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் ராபின் உத்தப்பா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விடியோவை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர், “வணக்கம் சென்னை.. எப்படி இருக்கீங்க” என ஆரமித்து தமிழில் உரையாற்றினார். அப்பொழுது அவர், “எனக்கு விசில் போட தெரியாது.. ஆனா உங்க கையாள உங்கள விசில் போட வைப்பேன்” என பேசினார். தற்பொழுது அந்த விடியோவை சென்னை அணி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
Robbie in #Yellove for the first time! Whistle Poda ready ah, all of you?! #WhistlePodu @robbieuthappa ???????? pic.twitter.com/v0GO2oRrJF
— Chennai Super Kings (@ChennaiIPL) February 21, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை.!
July 26, 2025