#BREAKING: முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் பிரேமலதா விஜயகாந்த் போட்டி..!

தேமுதிக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இன்று விருப்ப மனுவை பிரேமலதா விஜயகாந்த் தாக்கல் செய்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் மார்ச் 5-ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேமுதிக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முதன்முறையாக விருப்பமனுவை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தாக்கல் செய்தார்.
இந்த தொகுதியில் போட்டி என குறிப்பிடாமல் விருப்பமனுவை அளித்துள்ளார். ஆனால், பிரேமலதா விஜயகாந்த் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பாகப் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் வரும் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நேர்காணல் நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!
July 27, 2025
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025