#BREAKING: திமுக கூறும் தொகுதிகள் எங்களுக்கு போதுமானதாக இல்லை; கே.பாலகிருஷ்ணன்..!

திமுக ஒதுக்குவதாக கூறும் தொகுதிகள் எங்களுக்கு போதுமானதாக இல்லை என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திமுக-மார்க்சிஸ்ட் கட்சி இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் தொகுதி பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட தொகுதி பங்கீடு குழுவுடன் மார்க்சிஸ்ட் கட்சி 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில், திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன்,
திமுக எங்களுக்கு ஒதுக்கக்கூடிய தொகுதிகள் எண்ணிக்கையில் ஒரு எண்ணிக்கையை எங்களிடம் சொன்னார்கள்; திமுக ஒதுக்குவதாக கூறும் தொகுதிகள் எங்களுக்கு போதுமானதாக இல்லை, நாங்கள் இன்னொரு எண்ணிக்கையை அவர்களிடம் கூறியுள்ளோம்.
இன்று மாநில செயற்குழு கூட்டம் உள்ளதால், செயற்குழு கூட்டத்தில் கலந்து ஆலோசித்து கூறுகிறோம் என கூறியுள்ளோம். திமுக பேச்சுவார்த்தை குழு தலைவரிடம் கலந்து ஆலோசித்து மீண்டும் மாலையில் தகவல் கூறுகிறோம் என தெரிவித்துள்ளனர்.
அதிமுக -பாஜக கூட்டணி ஒரு காயலாங்கடை இன்ஜின் மாதிரி ; அது ஓடாது என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025