#BREAKING: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு – தடை விதிக்க மறுப்பு

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வன்னியர்களுக்கு 10.5% உல் ஒதுக்கீடு வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்கு ஒருபக்கம் எதிர்ப்பும் மறுபக்கம் அனைத்து சமூகத்திற்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்றும் சாதிவாரியாக கணக்கீடு நடத்தப்பட்ட பிறகு தான் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் பல விமர்சனங்கள் எழுந்தன. மேலும் இதுகுறித்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தடைகோரி திண்டுக்கல் விஜயகுமார் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நீதிபதிகள் அணையிட்டுள்ளார். தமிழக அரசு 6 வாரங்களில் பதில் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025