‘அந்தகன்’ படத்தில் இணைந்த ‘பிக்பாஸ்’ வனிதா விஜயகுமார்.!

பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் பிக்பாஸ் பிரபலமான வனிதா விஜயகுமார் இணைந்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா ,தபு , ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த திரைப்படம் “அந்தாதூன்”. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.450 கோடி வரை வசூல் செய்தது .
மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்த படமானது ‘அந்தகன்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக்காக உள்ளது . பிரசாந்த் நடிக்கும் இந்தப் படத்தினை அவரது தந்தையான தியாகராஜன் இயக்கி தயாரிக்கிறார்.சமீபத்தில் படப்பிடிப்பை தொடங்கிய இந்த படத்தில் கார்த்திக், சிம்ரன், ஊர்வசி, மனோபாலா,கேஎஸ் ரவிகுமார் ஆகியோர் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது அந்தகன் படத்தில் பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான வனிதா விஜயகுமார் இணைந்துள்ளார் .இதனை அவரது டுவிட்டர் பதிவு உறுதி செய்துள்ளது.
ஏற்கனவே வனிதா விஜயகுமார் காற்று எனும் படத்திலும் ,2கே அழகான காதல் எனும் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
All the best from the bottom of my heart @actorprashanth …kill it…cant wait to join the team https://t.co/Pdxb2cdksF
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) March 10, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025