தொகுதி மாற்றிக்கொண்ட அமமுக -தேமுதிக..!

தஞ்சாவூர் தொகுதியில் அமமுகவும், கீழ்வேளூர் (தனி) தொகுதியில் தேமுதிகவும் போட்டியிடவுள்ளனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமைக்கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தஞ்சாவூர் (174) சட்டப்பேரவைத் தொகுதியை தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு அளித்துவிட்டு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த கீழ்வேளூர் (தனி) (164) சட்டப்பேரவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடுவது எனவும் பரஸ்பரம் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் தேமுதிக சார்பில் அவைத்தலைவர் இளங்கோவன், அமமுக சார்பில் துணைபொதுச்செயலாளர் செந்தமிழன் ஆகியோர் கையெழுத்திடிட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!
July 29, 2025
ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?
July 29, 2025