தீய கட்சியான திமுக.., துரோக கட்சியான அதிமுகவை வீழ்ந்துவதே எங்களது நோக்கம் – டிடிவி தினகரன்..!

சட்டமன்ற தேர்தலில் தேமுதிக – அமமுக கூட்டணி உறுதியான நிலையில் முதல் முறையாக விஜயகாந்தை டிடிவி தினகரன் சந்தித்தார்.
அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தாங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வராமல் குறைவான தொகுதிகளை மட்டுமே ஒதுக்கினர். இதனால், அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியது.
பின்னர், தேமுதிக நீண்ட பேச்சுவார்த்தைகள் நடத்திய பிறகு அமமுகயுடன் கூட்டணி அமைத்தது. அமமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதற்கான வேட்பாளர் பட்டியலிலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் தேமுதிக – அமமுக கூட்டணி உறுதியான நிலையில் முதல் முறையாக விஜயகாந்தை டிடிவி தினகரன் கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் சந்தித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் தமிழக மக்களுக்கு நன்மை தர தேமுதிகவுடன் அமமுக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறோம். தீய கட்சியான திமுக, துரோக கட்சியான அதிமுகவை வீழ்ந்துவதே எங்களது நோக்கம். தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமமுக வேட்பாளர்கள் வாபஸ் பெற்றனர். அதிமுக, திமுக கட்சிகள் தேர்தல் அறிக்கை மூலம் மக்களை ஏமாற்ற நினைக்கிறது என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025