#BREAKING: கூட்டணி வேட்பாளர்களுக்கு சின்னம் தர தடையில்லை – உயர்நீதிமன்றம்

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தை கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்வதை தடுப்பது தற்போது சாத்தியமில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூரை சேர்ந்த என்பவர் பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார். அதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தை அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கும் நடைமுறை தொடர்கிறது. இது தேர்தல் ஆணையம் விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது, வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான சின்னங்கள் ஒதுக்கும் பணி நிறைவடைந்து உள்ளதால், இந்த தேர்தலில் மனுதாரர் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என தெரிவித்துள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தை கூட்டணி வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்வதை தடுப்பது தற்போது சாத்தியமில்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், மனுதாரர் கோரிக்கை குறித்து விரிவான பதில் மனுவை தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அடுத்தடுத்த தேர்தலில் இது அமல்படுத்துவது சாத்தியமா என்பதை தேர்தல் ஆணையம் விரிவாக விளக்க எனவும் உத்தரவிட்டு, இந்த வழக்கை ஜூன் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைத்து என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025