தளபதி 65 படத்தில் இரண்டு ஹீரோயின்..? வெளியான மாஸ் தகவல்..!!

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் படத்தில் விஜய்க்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் நடிக்கவுள்ளாராம். அதில் ஒரு நடிகை பூஜா ஹெக்டே என்பது உறுதியாகிவிட்ட நிலையில், மற்றோரு நடிகையாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்றவுள்ளார். நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளதாகவும், அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025