#Election Breaking : தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கத்தில் துப்பாக்கி சூடு…! 2 வீரர்கள் காயம்…!

பக்வான்ப்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்குவாதற்கு முன் வாக்காளர்களை அச்சுறுத்தும் வண்ணம் மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, அங்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், பக்வான்ப்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்குவாதற்கு முன் வாக்காளர்களை அச்சுறுத்தும் வண்ணம் மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் தடுத்துள்ளனர். அதில் 2 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருடன் சேர்ந்து சிலர், அரக்கோலில் வாக்காளர்களை அச்சுறுத்தியதாக பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!
July 29, 2025
ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?
July 29, 2025