கொரோனாவால் உயிரிழந்த கணவர் – இறுதிச் சடங்கை சீனாவிலிருந்து வீடியோ காலில் பார்த்து கதறி அழுத மனைவி!

கொரோனாவால் உயிரிழந்த கணவரின் இறுதிச் சடங்கை சீனாவிலிருந்து வீடியோ கால் மூலமாக மனைவி பார்த்து கதறி அழுதுள்ளார்.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவால் பலர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்த சோகம் ஒரு புறம் இருக்க, மறுபுறம் இறந்த தங்கள் உறவினர்களை கூட சென்று பார்க்க முடியாத அளவிற்கு பலர் சோகத்தில் மூழ்கி கிடக்கின்றனர். கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடமையாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலுமே ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவில் இருந்து தனது கணவரை பார்க்க முடியாமல் வீடியோ காலில் கதறியழும் மனைவியின் சோக சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் தான் மனோஜ் சர்மா. இவர் தன்னுடைய மனைவியுடன் சீனாவில் உள்ள வங்கி ஒன்றில் தங்கி பணியாற்றி வந்துள்ளார். அண்மையில் மத்திய பிரதேசத்துக்கு வந்துள்ளார். அப்பொழுது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ள நிலையில் சீனாவில் இருக்கக்கூடிய அவரது குடும்பத்தினருக்கும் மனோஜ் சர்மா உயிரிழந்துவிட்டார் எனும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து நேற்று மனோஜின் உடலை சமூக சேவகர் ஒருவர் குடும்பத்தினர் அனுமதியுடன் எரித்துள்ளார். ஆனால் மனோஜ் சர்மாவின் குடும்பத்தினர் ஒருவரும் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. அவரது மனைவி சீனாவில் இருந்து தனது கணவரின் இறுதிச் சடங்கை வீடியோ கால் மூலமாக பார்த்து கதறி அழுதுள்ளார். இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025