#BREAKING: சனிக்கிழமையும் இறைச்சி கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு.!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக சனிக்கிழமைகளில் இறைச்சி, மீன் கடைகளை திறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமலில் இருக்கும் போதே, மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, இன்று அந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், மே 1ம் தேதி சனிக்கிழமை அன்றும் இறைச்சி கடைகள், மீன் மார்கெட்டுகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் தடையை மீறி இறைச்சி விற்பனை கடைகளை திறந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது
மேலும் ஏற்கனவே அமலில் இருக்கும் ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கத்தால், சனிக்கிழமை அன்று இறைச்சி கடைகளில் சமூக இடைவெளியின்றி மக்கள் அதிகம் குவிவதால் சனிக்கிழமையிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025