‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்ட பணிகள் தொடக்கம்….! – சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ்

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டப்பணிகள் தொடங்கியுள்ளதாகவும், இதன் முதற்கட்டமாக 6 லட்சம் புகார்கள் கணினியில் பதிவேற்றும் பணிகள் நடக்கின்றன.
தமிழகத்தில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது மாவட்டந்தோறும், மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான மனுக்களை பெற்று, அம்மனுக்கள் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்று வாக்குறுதியை அளித்து இருந்தார்.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முதலமைச்சராக பதவி ஏற்றார். முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் தலைமை செயலகத்திற்கு சென்று அவர் கொரோனா நிவாரண நிதியை ரூ.4000 அளிக்கும் விதமாக, இந்த மாதமே ரூ.2000 வழங்கும் அரசாணை மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை செயல்படுத்த புதிய துறையை உருவாக்கி அதற்கு அதிகாரி ஒருவரை நியமிக்கும் அரசாணை உள்ளிட்ட ஐந்து அரசுஆணைகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
அதன்படி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்தத் துறையின் சிறப்பு அலுவலராக ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முதல்வரின் நேரடி கண்காணிப்பில் பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சிறப்பு அலுவலராக தேர்வு செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை குறித்து கூறுகையில், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டப்பணிகள் தொடங்கியுள்ளதாகவும், இதன் முதற்கட்டமாக 6 லட்சம் புகார்கள் கணினியில் பதிவேற்றும் பணிகள் நடக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025