காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை-உணவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை..!

காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சற்று நேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் காய்கறி வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். உயர்த்தப்பட்ட காய்கறி விலைகளை உடனே குறைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
இக்கட்டான நிலையை பயன்படுத்தி செயற்கையாக கூடுதல் விலைக்கு விற்பது மக்களை சுரண்டும் செயல். தளர்வில்லாத ஊரடங்குக்கு மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். நாளை முதல் தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னையில் காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025